திருவனந்தபுரம்….

திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர் நஜிபூ. இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனை வி சுஜிதா. இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இரண்டாவது மகன் ஆதில் முகமது (வயது 12) திருவனந்தபுரத்தில் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சுஜிதா வின் தாயார் பூதப்பாண்டி அருகே திட்டு விளை பகுதியில் உள்ளது. அங்கு ஆதில் முகமது வந்திருந்தான்.

கடந்த 6-ம் தேதி வீட்டில் இருந்து விளையாட சென்ற ஆதில் முகமது, நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வர வில்லை. இதையடுத்து அவரது உற வினர்கள் அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து பூதப்பாண்டி போலீசில் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

மாயமான ஆதில் முகமதுவை ஊர்மக்களும் போலீசாரும் தேடி வந்த நிலையில், ஞாயிறன்று காலை மணத்திட்டை பகுதியில் உள்ள குளத்தில் ஆதில் முகமதின் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து ஆதில் முகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவரது தாயார் சுஜிதா தனது மகன் சா வில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் கூறினார். இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி. வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் ஆதில் முகமது சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சென்றது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை பிடித்துதொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நண்பனுடன் ஆதில் குளத்திற்கு சென்றது,மீண்டும் அதே வழியாக நண்பன் மட்டும் தனியாக வீடு திரும்பியது போன்ற காட்சிகள் சிசிடி வி கேமரா வில் பதிவாகியுள்ளன.

மேலும், இரு நாட்களாக ஆதிலை ஊர்மக்களே திரண்டு தேடிய வேளையில், அவனுடன் சென்ற நண்பனும் அவர்களோடு தேடியது போன்ற சம்பவங்கள் நண்பன் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூர் ஆய்வு அறிக்கை வந்த பின்னர் விசாரணை மேலும் தீ விரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவனின் மரணம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியதோடு, மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மேலும் இறந்த சிறுவனின் உற வினர்கள் நண்பர்கள் நடந்து சென்ற பாதையில் நேரில் பார்த்த பெண்மணியிடம் விசாரித்துள்ளனர் அந்த பெண்மணி நடந்ததை தெரி வித்துள்ளார். தற்போது அந்த காட்சி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

மேலும் இறந்த அதில் முகமதின் உற வினர்கள் கூறுகையில், இது போன்ற நிகழ்வு மற்ற குழந்தைகளுக்கு வந்து விடக்கூடாது ஆகையால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மரணமடைந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குற்றம் யார் செய்தாலும் உடனடியாக காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவப்பு சட்டை அணிந்து சென்ற சிறுவன் மீது பல்வேறு புகார்கள் ஊரில் இருக்கிறது. அவன் படித்த பள்ளிகளில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக டீசி வாங்கி வெளியே மாற்றப்பட்டுள்ளான். ஆகையால் அவனை துரித விசாரணை மேற்கொண்டு தன் மகனின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.