மிஷ்கின்….

சிம்புவின் மீது சினிமா வட்டாரங்களில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மாநாடு படத்தில் நடிப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக துடைத்து எறிந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்கு எடுத்துக்காட்டாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு சென்று நடித்து வருகிறார். இதனால் சிம்புவால் நஷ்ட படாத ஒரே தயாரிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி.

இந்த படத்தில் சிம்பு நடந்து கொண்டதைப் பார்த்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதில் ஒன்றுதான் சிம்பு மிஸ்கின் கூட்டணியில் உருவாகும் படம்.

இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது என்பது சமூக வலைதளங்களில் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

மிஷ்கின் சிம்பு இணையும் படத்தில் சிம்புவுக்கு போலீஸ் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். போலிஸ் கதாபாத்திரத்திற்கு எடுப்பான உடல்வாகு தற்போது சிம்புவுக்கு கிடையாது என்பதை இதற்கு முன்னர் நடித்த அச்சம் என்பது மடமையடா படத்திலேயே பார்த்தோம்.

அதுமட்டுமில்லாமல் சிம்பு போலீசாக நடித்த ஒஸ்தி, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் பெரும் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்டிமென்ட் பார்க்கும் ரசிகர்கள், மிஸ்கின் மீதுள்ள நம்பிக்கையால் தங்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.