மீண்டும் காதலில் விழுந்த திரிஷா? யார் அவர்!!

629

தமிழ் சினிமாவில் 1999ல் ஜோடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் திரிஷா. அந்த படத்தில் அவர் ஹீரோயின் இல்லை என்றாலும் அதுவே அவரது முதல் படம். சினிமா பயணத்தில் 20 ஆண்டுகாலத்தை பூர்த்தி செய்ய இருக்கும் அவர் சொந்த வாழ்க்கையில் பூர்த்தி செய்ய வேண்டியதை பூர்த்தி செய்யாமல் தான் இருக்கிறார்.

அது என்னவென்றால் வேறு ஒன்றுமில்லை அவரது கல்யாணம். வருடா வருடம் தனது புதுபட அறிவிப்புகளை வெளியிடும் அவர் தனது திருமண அறிவிப்பை வெளியிடாமலேயே உள்ளார். ஆனால் இத்தனை வருடங்களில் அவரை சுற்றி கிசுகிசுக்களுக்கு மட்டும் பஞ்சமில்லை.

முதலில் தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் கொண்டார். அதன்பிறகு தயாரிப்பாளர் வருண்மணியன், இந்த காதல் கொஞ்சம் நீளமானது ஏனென்றால் நிச்சியதார்த்தம் வரை சென்றது. பிறகு காரணமே தெரியாமல் நின்றது.

அதன் பிறகு தான் திரிஷாவின் நடிப்பு தீவிரமானது. அதனாலயே தற்போது அவரது கையில் அரைடஜன் படங்களை வைத்துள்ளார். எல்லாம் நல்ல தான் சென்று கொண்டிருந்தது, ஆனால் ’காதல் ஆசை யாரை விட்டதோ’ மாதிரி மறுபடியும் காதலில் சிக்கியுள்ளார்.

தற்சமயம் கனடாவில் உள்ள திரிஷா டுவிட்டரில் ’A table for two love’ என பதிவிட்டுள்ளார். யார் அந்த லவ் என்பதை திரிஷா தான் கூற வேண்டும்.