மீண்டும் பயங்கரம் : பட்டப்பகலில் இளைஞர் துடிதுடிக்க வெட்டி கொலை : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

1166

மீண்டும் பயங்கரம்

இந்தியாவில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலிக் கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் அட்டபூர் அருகே இருக்கும் பாலத்திற்கு அருகில் இளைஞர் ஒருவரை கோடாரியால் நபர் ஒருவர் கொடூரமாக பல முறை வெட்டி சாய்க்கிறார்.

இதில் அந்த நபர் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை என்ன காரணத்திற்காக செய்யப்பட்டது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனால் இறந்த நபர் நீதிமன்றத்திற்கு சென்று திரும்பும் போது இது நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சமீபத்தில் தான் பிரனாய் என்ற இளைஞர் தன் மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று திரும்பும் போது கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டார்.

அந்த சம்பவமே நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது, மக்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.