அவுஸ்திரேலியா…………
அவுஸ்திரேலியாவில் மீனவர் ஒருவர் மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்டுள்ளார். திடீரென தூண்டிலை ஏதோ இழுக்க, இழுத்த வேகத்தைப் பார்த்து பெரிய மீன் ஒன்று சிக்கியிருக்கலாம் என்று எண்ணி தூண்டிலை கஷ்டப்பட்டு இழுத்த Trent de With தூண்டிலின் முனையில் சிக்கியிருந்த விலங்கைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தார்.
அந்த தூண்டிலில் சிக்கியிருந்தது ஒரு பெரிய முதலை! இவர் தூண்டிலை இழுக்க, முதலை இவரை இழுக்க, கடைசியாக ஒரு வழியாக தூண்டில் விடுபட, முதலை மீண்டும் நீந்திச் சென்றுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோவில், Trent de With தூண்டிலை இழுக்க, திடீரென முதலை ஒன்று நீர்ப்பரப்புக்கு மேகே வருவதையும், அதனிடம் இருந்து தூண்டிலை விடுவிக்க அவர் படாதபாடு படுவதையும் காணலாம்.
அவுஸ்திரேலியாவில் இதுபோல் மீன் பிடிக்கும்போது இப்படி முதலை சிக்குவது வழக்கமான ஒன்றுதான் என்கிறார் Trent de With.
சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சில நாட்களில் 10,000 முறை பகிரப்பட்டுள்ளது இந்த வீடியோ.