சின்மயி
சின்மயி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தோடு “ஏன் அப்பவே அடிக்கலன்னு கேட்ட நல் உள்ளங்களுக்கு” என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது டெல்லியை சேர்த்த ஒரு இளம் பெண் தன்னிடம், தவறாக நடந்து கொண்ட ஒருவரை தாக்கியுள்ளார். இதனால் அந்த ஆண், இந்த பெண்ணை திருப்பி அடித்த போது, அந்தப் பெண்ணின் கண் கருவிழிகள் பாதிப்படைந்துள்ளது. இதனை பதிவிட்டு சின்மயி, அதனுடன் ஏன் அப்பவே அடிக்கலன்னு கேட்ட நல் உள்ளங்களுக்கு என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியபோது, சின்மயிடம், இந்த சம்பவம் அரங்கேறி 14 ஆண்டுகளுக்கு பின் இதை ஏன் கூறவேண்டும்? அப்போதே கூற வேண்டியது தானே என கேள்விகளை முன்வைத்தனர்.
தற்போது இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளதன் மூலம், ஒருவேளை அப்போதே தன்னிடம் தவறாக நடந்துகொண்டவரை நானும் தாக்கி இருந்தால் இப்படித்தான் நடந்திருக்கும் என சின்மயி மறைமுகமாக சொல்லியிருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.