அயர்லாந்து நாட்டில் மெக்டொனால்ட்டில் சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் பள்ளி சிறுவன் ஒருவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான்.
மெக்டொனால்ட்டில் விற்பனை செய்யப்படும் Peri Peri chicken சாப்பிட்ட காரணத்தால் அவரது உதடுகள் மற்றும் முகம் வீக்கம் அடைந்து ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Maleek Lawal என்ற 10 வயது சிறுவனுக்கு மெக்டொனால்ட் உணவுகள் என்றால் அதிக ஆசை.
Ilac Centre outlet இல் அமைந்துள்ள துரித உணவகத்திற்கு சென்ற இச்சிறுவன் அங்கு, Peri Peri chicken வாங்கி சாப்பிட்டுள்ளான்.
சாப்பிட்ட 10 நிமிடத்தில் இச்சிறுவனின் உடல்நலம் பாதிக்கப்பட்டு நான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளான்.
கழிவறையை விட்டு வெளியே வந்த பின்னர், அம்மா எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது, என்னால் நடக்க முடியவிலை என கூறியுள்ளான்.
மேலும், அவனது முகம் மற்றும் உதடு வீங்க ஆரம்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவனை பரிசோதித்த மருத்துவர்கள் இச்சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பால், முட்டை மற்றும் மீன் ஆகியவற்றை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
Peri Peri chicken பால் கலந்த உணவு ஆகும். இதனால் தான் இச்சிறுவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்துள்ளான் என கூறியுள்ளனர்.