ரகசியங்களை வெளியிடாதே: மெர்க்கலை எச்சரித்த இளவரசர் ஹரி!!

551

பிரித்தானிய அரச குடும்பத்தின் மருமகளாகியுள்ள மெர்க்கல், அதிகம் பேசும் தன்மை கொண்டவர் என்பதால் அரச குடும்பத்து விடயங்களை தனது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது என இளவரசர் ஹரியால் எச்சரிக்கப்பட்டுள்ளார் என நடிகையும், மெர்க்கலின் தோழியுமான Millie Mackintosh கூறியுள்ளார்.

அமெரிக்க நடிகையான மெர்க்கலுக்கு பிரித்தானியாவில் உள்ள 6 தோழிகளில் Millie Mackintosh என்ற நடிகையும் ஒருவர். இவருக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும், மெர்க்கலின் மணப்பெண் தோழியாக இவர் இருக்கப்போகிறார் என்ற செய்திகள் கூட வெளியாகின. திருமணம் முடிந்த பின்னர், ஹரி – மெர்க்கல் தம்பதியினரின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரச குடும்பத்து ரகசியங்களை வெளிவட்டார நபர்களிடம் எக்காரணம் கொண்டும் பகிர்ந்துகொள்ளக்கூடாது என ஹரி, மெர்க்கலை எச்சரித்துள்ளார் என Millie Mackintosh கூறியுள்ளார்.

மேலும், எந்த ஒரு விடயத்தையும் ஒன்றுக்கு இரு முறை மெர்க்கலிடம் ஹரி எடுத்துகூற மாட்டார். எந்த ஒரு விடயமாக இருந்தாலும் ஒருமுறை கூறியதோடு விட்டுவிடுவார் என கூறியுள்ளார்.