ரத்தம் தெறிக்க..! தெறிக்க..! மிருகத்தனமான பேய் படத்தை இயக்கப்போகும் மிஸ்கின்..!

401

மிஸ்கின்..

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் மிஷ்கின். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படம் எடுத்து வெற்றி காண்பதில் வல்லவர்.

சமீபத்தில் கூட இவரது இயக்கத்தில் வெளிவந்து செம ஹிட் அடித்தது சைக்கோ படம். இதனை தொடர்ந்து இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில் கிட்டத்தட்ட 11 கதைகளுக்கு மேல் ரெடி பண்ணி வைத்துவிட்டாராம் மிஸ்கின்.

சமீபத்தில் இவர் இயக்கிய பிசாசு படத்தில் பேயை தேவதையாக காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு பேய் என்றால் பயம் இல்லை என்பதைப்போல மாற்றிவிட்டார் மிஷ்கின்.

அடி உதை ரத்தம் என இதுவரை காட்டிய பேய் படத்தை வித்தியாசமான கோணத்தில் காட்டி வெற்றிப்படமாக கொடுத்தார் மிஷ்கின். இந்நிலையில் மீண்டும் ஒரு பேய் படத்தை இயக்க உள்ளாராம்.

இந்த படம் பிசாசு படத்திற்கு அப்படியே நேர் எதிராக இயக்கப் போகிறாராம். ரத்தம் சொட்ட சொட்ட பேய் படம் இயக்க ஆசைப்பட்ட மிஷ்கின் அந்த படத்திற்கு காவு என பெயர் வைத்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்க ரெடியாகி விட்டார் என இப்போதே பல நிறுவனங்கள் அவரது படங்களுக்கு அட்வான்ஸ் கொடுக்க ரெடி ஆகி விட்டார்களாம்.