காலீத் சஃபியின் கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஃபாத்திமா கூறுகிறார். காலீத் இறக்கும்போது அதை காணொளியாகப் பதிவு செய்ததற்காக வெட்கப்படுவதாக அவர் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்.
2016 டிசம்பர் ஒன்றாம் தேதியன்று லண்டனின் நார்த் ஏக்டன் பகுதியில், ஃபாத்திமாவின் ஆண் நண்பர் காலீத் சஃபியை, மற்றொரு ஆண் நண்பர் ரஜா கான் கத்தியால் தாக்கினார்.காலீத்தின் தலையில் பலமுறை தாக்கிய பிறகு, கத்தியால் மார்பில் குத்தியதும் அவர் கீழே விழுந்து இறந்தார்.
ரத்தம் வெளியேற, கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக் கொண்டிருந்த காலீத்துக்கு உதவி செய்யாமல், அவரது நிலையை காணொளி படமெடுத்தார் ஃபாத்திமா. பிறகு அதை ஸ்னாப் சாட் (Snapchat) என்ற சமூக ஊடகத்தில் பதிவேற்றினார் ஃபாத்திமா.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காலீத்க்கு உதவி செய்ய தாங்கள் முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் சிலர் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர், ஃபாத்திமாவை பார்த்து, உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? செத்துக் கொண்டிருக்கும் இவரின் காணொளிவை சமூக ஊடகங்களில் போடப்போகிறீர்களா என்று கேட்டதாக தெரிவித்தார்.
காலீத் இறந்த சில மணி நேரத்தில் ஸ்னாப் சாட்டில் காணொளிவை பதிவேற்றிய ஃபாத்திமா, ‘என்னுடன் மோதினால் இப்படித்தான் நடக்கும்’ என்று எழுதியிருந்தார்.
காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றியதைத் தவிர, அவமானப்படுத்தும் வார்த்தைகளையும் எழுதியதும் குற்றம் என்று நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கை காவல் துறையினர் விசாரித்தபோது பல ஆச்சரியமான விசயங்கள் தெரியவந்தது.
18 வயது காலீத் ரத்தம் வழிய மரணத்தின் இறுதி நொடிகளில் துடித்துக் கொண்டிருந்தபோது, ஃபாத்திமா ஒரு செல்பேசியில் அதைக் காணொளியாகப் பதிவு செய்துகொண்டே, மற்றொரு செல்பேசியில் பேசிக் கொண்டிருந்தார் என்பது கண்காணிப்பு கேமெரா பதிவுகள் காட்டின.
காலீத்தின் மரணத்திற்கு பிறகு தலைமறைவான ரஜா கானிடம்தான் ஃபாத்திமா பேசிக்கொண்டிருந்தார் என்பதும் விசாரனையில் தெரிய வந்தது.நண்பர் கொடுத்த ஆதாரம்
இந்த கொலை தொடர்பான காணொளிப் பதிவு ஸ்னாப்சாட் சமூக ஊடகத்திலிருந்து 24 நேரத்திற்கு பிறகு நீக்கப்பட்டது.மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு
சமூக ஊடகத்தில் இருந்து காணொளி நீக்கப்படுவதற்கு முன்பு ஃபாத்திமாவின் நண்பர் ஒருவர் காணொளியை ஸ்னாப்சாட்டில் இருந்து தனிப்பட்ட முறையில் பதிந்து சேமித்து வைத்தார்; அது நீதிமன்றத்தில் ஃபாத்திமாவுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டது.
தனது வாழ்வில் நடைபெறும் அனைத்தையும் சமூக ஊடகங்களில் பதிவிடும் உரிமை ஃபாத்திமாவுக்கு இருப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார். ஸ்னாப்சாட்டில் மிகவும் பிரபலமாக இருந்த ஃபாத்திமா, தன்னை ‘ஸ்னாப்சாட் குயின்’ என்று அழைத்துக்கொள்வாராம்!
சமூக ஊடகங்களே தங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பகுதி என்று நினைக்கும் இளைஞர்களில் ஃபாத்திமாவும் ஒருவர், இதுபோன்றவர்கள் தங்கள் விருப்பப்படி செயல்படுகிறார்கள், இது சரியான போக்கல்ல என்று ஃபாத்திமாவின் வழக்கறிஞர் கரீம் ஃபெளத் கூறுகிறார்.
காலீத்தும் ஃபாத்திமாவுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நட்பு தொடர்ந்தாலும் இருவருக்கும் இடையிலான உறவு சாதாரணமாகவே இருந்தது.
காலீத்துக்கு முன்பே ஃபாத்திமாவின் ஆண் நண்பராக இருந்தவர் ரஜா கான். அவர் ஸ்னாப்சாட்டில் ஃபாத்திமாவை பின் தொடர்ந்தார். காலீத்தும், ரஜா கானும், ஃபாத்திமாவுடன் பழகுவது தொடர்பாக சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் இதுபோன்ற பல விசயங்கள் வெளியாகின. கடிகாரம் ஒன்றை வாங்கிக் கொண்டு காலீத், ஃபாத்திமாவின் வீட்டிற்கு சென்றபோது, கோபப்பட்ட ஃபாத்திமா அதை வெளியே வீசி எறிந்திருக்கிறார். காலீத் தனது வீட்டிற்கு வருவது ஃபாத்திமாவுக்கு பிடிக்கவில்லை.
தலைமறைவான ரஜா கான்:ரஜா கான், காலீத்தை கொல்லப்போகிறார் என்ற தகவல் ஃபாத்திமாவுக்கு தெரியும்; அதற்கு அவர் அனுமதி கொடுத்தார் என்பது நீதிமன்ற விசாரணையில் வெளியானது.இலங்கையில் ஊற்றெடுத்து ஜெர்மனியில் ஓடும் காதல் நதி
காலீத் தன்னை எங்கே சந்திப்பார், அவரை எப்போது தாக்கினால் சரியாக இருக்கும் போன்ற தகவல்களை கூறியதும் ஃபாத்திமாவே கையில் கத்தியுடன் ரஜா கான் வருவதை பார்த்த காலீத், திருப்புளியை எடுத்துக்கொள்ள, இருவருக்கும் இடையிலான கைகலப்பு 15 நொடிகள் வரை நீடிப்பதை கண்காணிப்பு கேமெரா பதிவுகள் தெளிவாக காட்டுகிறது.
காலீத் இறந்ததும் அங்கிருந்து தப்பியோடிய ரஜா கான், இன்று வரை தலைமறைவாகவே இருக்கிறார்.
“ஃபாத்திமாவின் கண்களுக்கு முன்பாகவே காலீத் கொல்லப்பட்டார், ஆனால் அவசர சேவைகளை அழைக்கவோ, காலீத் சஃபிக்கு உதவி செய்யவோ முயலாத ஃபாத்திமா, காணொளி எடுத்துக் கொண்டிருந்தார். பிறகு டாக்சியை வரவழைத்து சென்றுவிட்டார்” என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
வீட்டிற்கு திரும்பிய ஃபாத்திமா, அன்று இரவு ஸ்னாப்சாட்டுக்காக, தான் செல்பேசியில் பதிவு செய்த காணொளியை திருத்தம் செய்து பதிவேற்றினார். தனது குடும்பத்தினருடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். அவர் நடந்த கொலையை பார்க்காதது போல இயல்பாகவே இருந்திருக்கிறார்.
பின்னர்தான் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டு, கைதாகி விசாரணையை அவர் எதிர்கொண்டுள்ளார்.