ராணுவத்தில் கொல்லப்பட்ட கணவர் : கனவை நனவாக்க அதே பணியில் சேர்ந்த துணிச்சல் பெண்!!

867

ராணுவத்தில் கொல்லப்பட்ட கணவர்

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த கணவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவருடைய மனைவி ராணுவத்தில் சேர்ந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியை சேர்ந்த Ravinder Sambyal, இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் 2013-ம் ஆண்டு Niru என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு எல்லையில் பணியாற்றிய Ravinder, அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் எதிரிகளால் வீரமரணம் அடைந்தார்.

இதனால் பெரும் துயரத்திற்கு ஆளான Niru, ஒரு தாயாக தன்னுடைய மகளை பொறுப்பாக வளர்த்ததோடு, கணவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ராணுவத்தில் சேர்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தார்.

49 வார ராணுவ பயிற்சிக்கு பின்னர் Niru தற்போது இந்திய ராணுவத்தில் லெப்டினெண்ட்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள Niru, தன்னுடைய கணவரின் ஆசையை தான் நிறைவேற்றி விட்டதாகவும் பெருமை தெரிவித்துள்ளார்.