லட்சக்கணக்கான சம்பளத்தை விட்டு மாடு மேய்க்கும் இளைஞன்

612

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம், மாடுகளை வளர்க்க வேண்டும் என்ற ஆவலால் பன்னாட்டு நிறுவன வேலையை உதறித்தள்ளிய இளைஞர் தற்போது பண்ணை தொழில் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் ஓசூரை சேர்ந்த அருண்பிரசாத் என்ற இளைஞர் லட்சக்கணக்கான சம்பளத்தில் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.கடந்தாண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு இவரின் வாழ்க்கை மாறியது.

அதாவது போராட்டத்தின் நோக்கம் அருண்பிரசாத்தை பிடித்துக்கொண்டது.இதையடுத்து தானே மாடு வளர்க்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்த அருண்பிரசாத் தனது வேலையை உதறி தள்ளினார்.முதலில் 7 மாடுகளுடன் தனது சொந்த கிராமமான குடிசாதனப்பள்ளியில் பண்ணையை தொடங்கிய நிலையில் தொடக்கத்தில் பல சிரமங்களை சந்தித்தார்.

அழிவின் விளிம்பில் இருக்கும் காங்கேயம், உம்பளச்சரி, ஆலாம்பாடி, பர்கூர், ஹெலிக்கோ போன்ற நாட்டு மாட்டினங்களை வாங்கி தனது பண்ணையில் வளர்க்கத் தொடங்கியுள்ளார்.

மேலும் அருகில் உள்ள விவசாயிகளுக்கும் மாடுகள் வாங்கி கொடுத்துள்ளார். தற்போது அருண்பிராசாத்தின் ஓவியா கால்நடைப் பண்ணையில் சுமார் 700 மாடுகள் உள்ளது.

நாள் ஒன்றிற்கு சுமார் 400 லிட்டர் வரை சுத்தமான பசும்பால் பண்ணையில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.மகன் தொழிலுக்கு முதலில் தான் தயக்கம் காட்டியதாகவும், ஆனால் அவரின் உழைப்பை பார்த்து தானும் இப்போது அவருடன் சேர்ந்து உழைப்பதாகவும் அருண்பிரசாத்தின் தாய் சுந்தரி தெரிவித்துள்ளார்.