லண்டன் உணவகத்தில் 14 வயது இந்திய மாணவி வரைந்த ஓவியங்கள்! அதில் அப்படி என்ன இருக்கு தெரியுமா? வெளியான புகைப்படங்கள்..!

335

இந்தியாவை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி வரை ஓவியங்கள், லண்டனில் உள்ள உணவகத்தை அலங்கரிக்கும் பெருமையை பெற்றுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஆஸ்னா. 14 வயது சிறுமியான இவருக்கு ஓவிய வரைவது மிகவும் பிடிக்கும். இதன் காரணமாக ஆஸ்னா அவ்வப்போது ஓவியம் வரைந்து தன்னுடைய திறமையை பெற்றோரிடம் வெளிப்படுத்தி வந்துள்ளார். ஆஸ்னாவின் திறமையைக் கண்ட, அவரின் தந்தை, மகள் வரைந்த புகைப்படங்களை தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதைக் கண்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தும், ஆஸ்னாவின் ஓவியத்திறமையை பாராட்டியும் வந்தனர். இந்நிலையில், தெற்கு லண்டனைச் சேர்ந்த அதீனா கிட்சன் உணவகத்தை நடத்திவரும் அதிபர், அந்த ஓவியங்களை தன் உணவகத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

சையதா ஆஸ்னா துராபி என்ற பெயரைக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவியின் ஓவியங்கள் பிரித்தானியாவை சேர்ந்த தொழிலதிபரின் மனங்கவர்ந்துள்ளது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

என் மகளின் திறமையில் பெருமைப்படுகிறேன். நான் அவருடைய ஓவியத் திறமையை மேம்படுத்துவதற்கு உதவியாக இருந்து வருகிறேன். அவரது ஓவியங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று அவரின் தந்தை கூறியுள்ளார்.

மேலும், ஹைதராபாத் உணவுகளுக்குப் பிரபலமான அதீனா உணவகத்தில் மாணவி வரைந்த ஓவியங்கள் ஆறு அடியில் வைக்கப்பட்டுள்ளன. அவரது ஓவியங்கள் இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.