லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே ஒரு அவமானம்.. சர்ச்சையை ஏற்படுத்திய மஞ்சு வாரியர்!!

86

மஞ்சு வாரியர்..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வட்டாரத்திலும் கால் பதித்துள்ள நடிகை நயன் தாரா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து பின் 2022ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில மாதங்களில் இரட்டை குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்து வளர்ந்து வருகிறார். தற்போது வரை அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூப்பிட்டு வருகிறார்கள். லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சில நடிகைகளிடம் கேள்வி எழுப்பினால், நயன் தாரா அதற்கு தகுதியானவர் தான் என்று கூறுவார்கள்.

ஆனால் நடிகை மஞ்சு வாரியரின் லேடி சூப்பர் ஸ்டார் குறித்த கருத்து சற்று வேறுபட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மஞ்சு வாரியம் அளித்த பதிலில், என்னை ஒரு சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது தேவையில்லாத விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது.

இது எனக்கு தனிப்பட்ட முறையில் அவமானமாக உள்ளது. இந்த பட்டத்திற்கு என சில வரைமுறைகளை வைத்திருக்கும் நிலையில் உண்மையில் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், ரசிகர்களின் அன்பு ஒன்றே போதும் என்று மஞ்சு வாரியர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.