வயிற்று வ லியால் அவதியுற்ற நபர் : கழிப்பறையில் கண்ட திகில் காட்சி!!

322

கழிப்பறையில்..

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் வயிற்று வ லி ஏற்பட்டதையடுத்து கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது Duangchan Dachyoddee (34) என்ற அந்த நபர் தற்செயலாக கழிப்பறைக்குள் பார்க்க, அவரது வயிற்றிலிருந்து புழு ஒன்று வெளியேறியுள்ளது.

ஒரு ஏலியனைப்போல 17 அடி நீளத்தில் வெளியே வந்த அந்த புழுவைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதை ஒரு மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளார்.

அதைக் கண்ட அந்த மருத்துவர், அது ஒரு நாடாப்புழு என்றும், பச்சை மாமிசம் சாப்பிடுவதால் அது பரவும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த புழுவின் முட்டைகள் மாமிசத்தில் இருக்குமாம்,

சரியாக வேகவைக்காமல் அல்லது பச்சையாக மாமிசத்தை சாப்பிடும்போது அவை வயிற்றுக்குள் குஞ்சு பொரித்து புழுக்களாக மாறுமாம். அவரது வயிற்றுக்குள் மேலும் புழுக்கள் இருக்கலாம் என்று கூறியுள்ள மருத்துவர், அந்த புழுக்களைக் கொல்வதற்காக அவருக்கு மருந்துகொடுத்துள்ளார்.