13 வயது சிறுமி

கோவையில்13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து அரைகிலோ தலைமுடி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த சில தினங்களாகவே வயிற்று வ லியால் அவஸ்தையடைந்து வந்துள்ளார்.

இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருடைய வயிற்றில் கட்டி போன்ற ஒன்று இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தனர்.

மருத்துவர் கோகுல் கிருபா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், சிறுமியின் வயிற்றில் இருந்து அரைகிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட் கவர் என சில பொருட்கள் இருந்துள்ளன.

இவை அனைத்தையும் வயிற்றில் இருந்து அகற்றிய மருத்துவர்கள், சிறுமி தற்போது நல்ல நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.