வவுனியாவில் ஒரு கிலோ நெல் 50 ரூபாவிற்கு கொள்வனவு!!

395

பெரும்போகத்தில் அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கிராம் நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் நடவடிக்கை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த செயற்றிட்டம் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலையில் இன்று (06.02.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வருடங்களில் நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 38 ரூபாவுக்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்பட்டது.

இந்தத் தடவை அனைத்து ரக நெல்லுக்கும் ஆகக்கூடிய விலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரசாங்கம் ஒரு கிலோ கிராம் நெல் 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.

விவசாயிகள் பலர் ஆர்வத்துடன் நெல் விற்பனைக்கு வருகை தந்திருந்தனர். இந்த வேலைத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு விசேட சலுகைகளாக முதல்தடவையாக ஈரத்தன்மையுடன் கூடிய நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.