வவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்!!

238

வவுனியாவில் திருக்குறல் பெருவிழா நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (20.08.2019) காலை 10 மணிக்கு வவுனியா மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியாவில் திருக்குறல் பெருவிழா எதிர்வரும் 24-08-2019 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு வவுனியா பிரதேச குடியிருப்பு கலாசார மண்டபத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், விழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.

உலகப் பொதுமறையாம் திருக்குறளினை அனைவரும் உணரும் வகையில் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் ஆளுனரின் வழிகாட்டலுடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் திருக்குறல் வாரமானது 23-08-2019 தொடக்கம் 30-08-2019 வரையில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே திருக்குறல் பெருவிழா தொடர்பான கலந்துரையாடலில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.