வவுனியாவில் பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு!!

243

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (19.08.2019) காலை 9 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.

டிரான்ஸ்பரன்சிஇன்டநெசனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் நடத்தப்படும் இவ் பயிற்சி பாசறையின் வளவாளராக நளினி ரட்ணராஜா பங்குபற்றி உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கு சுயநம்பிக்கையினை வளர்ப்பதற்கான வழிகள், தனிநபர் சுயமதிப்பீடு, பலம் மற்றும் பலவீனம், சந்தர்ப்பம், அ ச்சுறுத்தல், ஊடகப் பயன்பாடு மற்றும் அதன் நுட்பங்கள் என்பன பற்றிய கருத்துக்களை வழங்கியிருந்தார்.