வவுனியா சிவன் முதியோர் இல்லத்தை பார்வையிட்ட அரசாங்க அதிபர்!!

350

வவுனியா சிவன் முதியோர் இல்லத்தை அரசாங்க அதிபர் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார்.

எதிர்வரும் 21ம் திகதி வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிவராத்திரி நிகழ்வுகள் தொடர்பாக ஆலயத்தின் அறங்காவலர்களுடன் கலந்துரையாடிய அரசாங்க அதிபர் அதனைத்தொடர்ந்து சிவன் முதியோர் இல்லத்திற்கும் சென்றிருந்தார்.

முதியோர் இல்லத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன, அங்குள்ள முதியவர்களின் வாழ்க்கை முறைகளை பார்வையிட்டதுடன், முதியவர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இதேவேளை அங்கு உணவு சமைக்கும் முறைகளை பார்வையிட்டிருந்ததுடன் முதியோர் இல்லத்தின் சுற்றுச்சூழலையும் பார்வையிட்டிருந்தார். இதன்போது வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரும் உடனிருந்தார்.