கிறிஸ்மஸ் கரோல் தமிழ் பாடல் போட்டியில் வவுனியா புனித சூசையப்பர் ஆலயத்தின் குழு முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு கேடயத்தையும் ஐம்பதினாயிரம் ரூபா பணப்பரிசினையும் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கொழும்பு றாகம புனித பேருதுவானவர் மற்றும் பவுலடியார் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அகில இலங்கை ரீதியில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழியில் கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டியில்
தமிழ் பாடல் போட்டியில் கலந்துகொண்ட வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலய குழுப்பாடகர் குழாம் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.
தமிழ் பாடல் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களான சனோஜன், நிதுஷன், டிலக்சன், ஜெறோன், திலோஷன், றொஷனி, சோபிகா, ஜெசிந்தா, ஜெனுஷியா வைலட், சொப்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.