இளம் பெண்

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் ஆண் நண்பருடன் சகஜமாக பேசி பேருந்தில் சென்றதை புகைப்படமாக எடுத்து மிரட்டிய, அந்த இளைஞன் குறித்த பெண்ணிடம் ஆடைகளை களைத்து வீடியோ காலில் பேச வைப்பது, ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்திய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் செவிலியர் பயிற்சி முடித்து வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் திடீரென்று குறித்த பெண் வாட்ஸ் ஆப் வீடியோ கால் ஒன்றில் ஆ பாசமாக தோன்றும் வீடியோ காட்சி அப்பகுதியில் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் வைரலானது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, உடனடியாக த ற்கொ லைக்கு முயன்றதால், பெற்றோர் அவரை சமாதானம் செய்து காப்பாற்றியுள்ளனர்.

அதன் விவரத்தை அறிந்த பெற்றோர், குறித்த வீடியோவை பரப்பிய வரதராஜன், விஜயகுமார், சங்கர் ஆகியோர் மீது புகார் அளித்தனர். பொலிசுக்கு சென்றால், தான் யார்? தன்னுடைய பெயர் என்ன என்பது ஊர் முழுக்க தெரிவிந்துவிடும் என்று அஞ்சிய அந்த பெண், வீட்டில் இருந்த மாத்திரைகளை சாப்பிட்டதோடு, வயலுக்கு வைத்திருந்த பூச்சி கொல்லி மருத்தையும் எடுத்து குடித்து த ற்கொ லைக்கு மீண்டும் முயன்றுள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி மீண்டும் த ற்கொ லைக்கு முயன்றதால், பொலிசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், குறித்த இளம்பெண் தற்போது பணிபுரியும் கல்லூரியில் படித்து வந்தபோது அவரது ஆண் நண்பருடன் பேருந்தில் ஒன்றாக அமர்ந்து சென்றுள்ளார்.

இதை கவனித்த அதே ஊரை சேர்ந்த வரதராஜன் என்ற நபர் செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்டு இருவரும் காதலித்துக் கொண்டு ஊர் சுற்றுவதாக வீட்டில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி, தன்னுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச வேண்டும் என்று கூறியுள்ளான்.

இதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன், ரகசியமாக வைத்திருப்பேன் என்று கூறியதால், மி ரட்டலுக்கு பயந்த அந்த பெண், அவ்வப்போது குறித்த மாணவனுடன் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வரதராஜம், மிரட்டலின் உச்ச கட்டமாக அந்த பெண்ணை ஆடைகளை களைய சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளான்.

இதனால் வேறு வழியின்றி, அந்த பெண்ணும் மி ரட்டலுக்கு பயந்து கல்லூரியில் மறைவான ஒரு அறைக்குள் சென்று ஆடைகளை களைந்துள்ளார். அதனை வாட்ஸ் ஆப் வீடியோ காலில் வரதராஜன் பதிவு செய்து வைத்துள்ளான்.

அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக கூறி தன்னுடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளான். இதனால் அவனின் எண்ணம் என்ன என்பதை புரிந்து கொண்ட அந்த பெண், வரதராஜனுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டார்.

இதனால் ஆ த்திரம் அடைந்த வரதராஜன், கல்லூரி பேருந்து ஓட்டுனர் விஜயகுமார் என்பவனிடம் உங்கள் கல்லூரி மாணவி வீடியோ என்று பகிர்ந்துள்ளான். அவன் தனது நண்பரான சங்கரிடம் ஆ பாச வீடியோவை காண்பிக்க, அவனும் தன் பங்கிற்கு இருவரது வாட்ஸ் ஆப்பில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளான்.

இதில் ஒருவருடைய மனைவி, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தெரிந்தவர் என்பதால் வீடியோ விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

இதுபோன்று யாராவது புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மி ரட்டினால் பெண்கள், மிரட்டலுக்கு அஞ்சத் தேவையில்லை என்றும், உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து நேரடியாக புகார் அளிக்குமாறும், எக்காரணத்தை கொண்டும் வாட்ஸ் ஆப்பில் புகைபடங்களை பகிர்வதையோ, வீடியோ காலில் தோன்றுவதையோ கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது என்று பொலிசார் அறிவுரை கூறியுள்ளனர்.