விக்ரம்-60 படத்தில் இணையும் விக்ரம்-துருவ் கூட்டணி..!

390

விக்ரம்-துருவ் கூட்டணி..

சியான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’, ஆர். எஸ் விமல் இயக்கத்தில் ‘மகாவீரர் கர்ணன்’ மற்றும் மணி ரத்னத்தின் கனவுத் திட்டமான ‘பொன்னியன் செல்வன்’ ஆகிய பிரம்மாண்டமான படங்களில் நடித்துவருகிறார்.

அதேபோல், அவரது மகன் துருவ் விக்ரம், ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக்கான ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் சிறப்பான எண்ட்ரி கொடுத்துள்ளார். அதையடுத்து, அவரது இரண்டாவது படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்ரு வருகிறது.

இதற்கிடையில், இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், ‘விக்ரம் 60′ திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாகவும், அதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இப்போது, அந்த படத்தில் தான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத சக்திவாய்ந்த கதாபாத்திரங்களில் இருவரும் திரையை பகிர்ந்துகொள்ளவுள்ளார்களாம்.

‘விக்ரம்60′ ஜெமினி, பீமா போன்ற ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்க வாய்ப்புளதாக கூறப்படும் நிலையில், இந்த அப்பா-மகன் கூட்டணி உறுதிசெய்யப்பட்டால், ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.