விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய விஜய் யேசுதாஸ் !

271

விஜய் யேசுதாஸ்…

சினிமா உலகில் வெற்றி பெற்ற மனிதர்களுக்கு மட்டுமே மரியாதைக் கிடைக்கும். ஒரு முறை வெற்றி பெற்று ஒரு முறை தோற்றால் கூட தோற்று போனவனை எப்படி பார்ப்பார்களோ அப்படிதான் சினிமா உலகமும் பார்க்கும், மக்களும் அப்படித்தான் அவரைப் பார்ப்பார்கள்.

அந்த வகையில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 300 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் விஜய் யேசுதாஸ். சமீபத்தில் மலையாள சினிமாவில் பாடகர்களுக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை குற்றம் சாட்டினார்.

இவர் தனுஷின் மாரி படத்திலும், படை வீரன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில்,

விஜய் யேசுதாஸ் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி மலைக்கு பயணித்துள்ளனர். அப்போது Untime-இல் ஆலப்புழா சென்று கொண்டிருந்த போது குறுக்கே ரோட்டிலிருந்து வேகமாக வந்த கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியுள்ளது.

 

எதிர்பாராதவிதமாக விஜய் யேசுதாஸ் சென்ற காரின் மீது அந்தக் கார் மோதியது. இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்திருந்தாலும் விபத்தில் யாரும் காயமடையவில்லை. விஜய் யேசுதாஸ் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.