விமானத்தில் குழந்தைக்கு தாய்பால் கொடுத்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை : கண்ணீர் விட்டு அழுத பரிதாபம்!!

921

பிரித்தானியா

பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் குழந்தைக்கு தாய் ஒருவர் பால் கொடுக்க முற்பட்ட போது, விமான ஊழியர் கொடுக்ககூடாது என்று கூறியதால், அவர் கண்ணீர்விட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Gatwick விமானநிலையத்திலிருந்து ஸ்பெயினின் Fuerteventura தீவுக்கு Kelly Edgson-Payne என்ற 36 வயது பெண், தன்னுடைய கணவர் Ross(40) மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஈஸி ஜெட் விமானநிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் சென்றுள்ளார்.

அப்போது விமானமானது புறப்பட்ட போது Kelly Edgson-Payne தன்னுடைய ஒரு வயது குழந்தை Lex-ற்க்கு தாய்ப் பால் கொடுத்துள்ளார். இதைக் கண்ட விமானத்தில் இருந்த விமான ஆண் ஊழியர் உடனடியாக வந்து விமானம் புறப்படும் போது பால் கொடுக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதனால் அந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நான் எப்போதும் வருவேன் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது என்று கூறியுள்ளார்.

விமானத்தில் பலர் இருக்கும் போது அவர் கூறியதால், சங்கடத்திற்குள்ளான அவர் அழுதுள்ளார். அதன் பின் விமானம் தரையிறக்கப்பட்ட பின் அவர் இதை பெரிய பிரச்சனையாக எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில், அவர் என்னிடம் அப்படி கூறும் போது என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர்களின் இணையதளத்தில் விமானத்தில் எப்போது வேண்டும் என்றாலும் நீங்கள் குழந்தைக்கு பால் கொடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நான் பல முறைந்த இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் சென்றிருக்கிறேன், கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதைப் பற்றி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைக்கு இமெயில் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் என்னிடம் கூறிய போது, நான் என் குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, கணவனிடம் கொடுத்துவிட்டு விமான ஊழியரிடம் பேசினேன். நான் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட போது கூட, இடையில் என் குழந்தைக்கு பால் கொடுத்தேன்.

இப்படி நான் என் குழந்தைக்காக ஒரு போதும், பால் கொடுப்பதை நிறுத்துவதில்லை, அந்த நபர் அப்படி கூறும் போது கண்ணீர் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கையில், எங்கள் நிறுவனம் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை எப்போதும் ஆதரிக்கிறது. எங்கள் நிறுவனத்தில் எப்போது வேண்டும் என்றாலும் கொடுக்கலாம், ஆனால் அன்று அந்த விமானம் எங்கள் சார்பில் மற்றொரு விமானநிறுவனத்தால் இயக்கப்பட்டது.

இதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம், வரும் காலத்தில் இது போன்று நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.