விளையாட்டாக பக்கோடா கடை போட்டவரின் வாழ்க்கையே மாறிப்போனது!

534

பிரதமர் மோடியை கிண்டல் செய்வதற்காக பக்கோடா கடை போட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினரின் வாழ்க்கை மாறிப்போயுள்ளது.சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நரேந்திர மோடி பக்கோடா கடை போட்டால் கூட ஒருநாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்கலாம் என பேட்டியளித்தார்.

இவரின் இந்த பேட்டி பட்டதாரிகளை அவமானப்படுத்துவதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் மோடியின் கருத்தை கிண்டல் செய்து பக்கோடா கடை போட்டனர்.

அப்படி பக்கோடா கடை போட்டவர் தான் குஜராத்தை சேர்ந்த நாரயண் ராஜ்புத். இதுகுறித்து அவர் கூறியதாவது, மோடியை கிண்டல் செய்யும் விதமாகதான் பட்டம் பெற்றும் வேலை இல்லாமல் இருந்த நான், பக்கோடா கடையை ஆரம்பித்தேன்.ஆச்சர்யப்படும் விதமாக லாபம் கிடைத்தது. தொடர்ந்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். தினமும் 600 கிலோ வரை பக்கோடா தயாரிக்கிறேன்.

100 கிராம் பக்கோடாவை 10 ரூபாய்க்கு விற்கிறேன் என்று கூறும் ராஜ்புத் நாராயணின் கடையின் பெயர் ஸ்ரீராம். மோடியின் அறிவுரையை எடுத்துக்கொண்டேன். அதற்காக பாரதிய ஜனதா கட்சியில் எல்லாம் சேர மாட்டேன். கடைசி வரை காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன் என கூறியுள்ளார்.