விவேகம் விஸ்வாசம் திரைப்படங்களை அடுத்து விஷாலின் திரைப்படத்தினை கையிலெடுத்த தயாரிப்பு நிறுவனம்!!

266

விஷால்…

நடிகர் விஷால் தனது கைவசம் துப்பறிவாளன் 2 மற்றும் இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கரின் பெயரிடாத திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவரது சக்ரா திரைப்படமும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வரும் விஷால், ஈட்டி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அரசு கதையில் விரைவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இத்திரைப்படத்தினை அஜித்குமாரின் விசுவாசம் விவேகம் ஆகிய தயாரிப்பு திரைப்படங்களின் திரைப்படங்களை,

தயாரித்த TG தியாகராஜனின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது என்ற செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.