வீடியோ ரகசியத்தை வெளியில் கசியவிட்ட பெண் : தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!!

767

இந்தியாவில் பெண்ணுடன் இளைஞர் தனியாக இருந்த வீடியோவை அப்பெண் சமூகவலைதளத்தில் வெளியிட்டதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சவுரவ் கோஷ். இவர் புத்தக கடையில் வேலை செய்து வந்த நிலையில் அங்குள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அடிக்கடி அப்பெண் வீட்டுக்கு சென்ற சவுரவ் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை சவுரவுக்கு தெரியாமல் அந்த பெண் தனது போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அந்த வீடியோவை சவுரவிடம் காட்டி அப்பெண் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் வீடியோவை சமூகவலைதளத்தில் கசியவிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சவுரவ் தற்கொலை செய்ய முடிவெடுத்து ரயில் முன்னர் பாய்ந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த போது சவுரவ் பாக்கெட்டில் இருந்த செல்போனை கைப்பற்றினார்கள். செல்போனில் அவர் ஒரு வீடியோவை பதிவு செய்து வைத்திருந்தார்.

அதில், என் இறப்புக்கு காரணம் அந்த பெண் தான், நான் அவருடன் இருந்ததை வீடியோ எடுத்து என்னை மிரட்டி வந்தார் என கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.