ஆனந்த குளியல்…….

வீதியில் தேங்கி நிற்கும் நீரில் சோப்பு போட்டு குளிக்கும் முதியவரின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
நிவர் புயலைத் தொடர்ந்து தமிழகத்தை மிரட்டிய புரெவி புயல் வலுவிழந்து கரையை கடந்த போதும், பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.

குறிப்பாக புரெவி புயலால் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கனமழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பியதால் எஞ்சிய மழை நீர் சாலைகளையும், குடியிருப்புகளையும் ஆக்கிரமித்துள்ளது.

அப்படி சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் முதியவர் ஒருவர் ஆனந்த குளியல் போடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே ஒரு நபரின் மார்பளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது.

அதனைப் பார்த்த முதியவர் ஒருவர் உடல் முழுவதும் சோப்பு போட்டு குளித்ததோடு, அந்த தண்ணீரில் இறங்கி உடல் முழுவதும் நனைய முழ்கி குளிக்கும் வீடியோ காண்போரை கலகலப்பாக்கியுள்ளது.