வெப் சீரியஸ் பார்த்து ஆசைக்காக கொலை செய்த அவலம்!!

1064

பூனேவில்…..

தொலைக்காட்சியில் வரும் கிரைம் த்ரில்லரைப் பார்த்து, ஆதனால் ஈர்க்கப்பட்டு இருவர் கொலை செய்த சம்பவம் பூனேவில் அரங்கேறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, (21 ஆகஸ்ட்) அன்று, அக்‌ஷய் பிரகாஷ் பீசே என்பவர் கொல்லப்பட்டதாக போலீசுக்கு புகாரளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

பிரபல தனியார் தொலைகாட்சியில் வரும் ‘கிரைம் பாட்ரோல்’ எனும் கிரைம் தொடரைப் பார்த்து ஈர்க்கப்பட்டதாக தெரிவித்த குற்றவாளி, தனது மனைவியுடன் இறந்த நபர் தொடர்பில் இருந்ததால் தான் இந்த கொலை செய்ததாகக் கூறியுள்ளார். கொலை செய்தவர்கள், கர்நாடகாவின் பிடார் பகுதியைச் சேர்ந்த, 28 வயதான சந்தோஷ் சத்யவான் ஷிண்டே மற்றும் பந்தர்பூர் டென்சிலின் கானாபுரி கிராமத்தைச் சேர்ந்த சங்க்ராம் எனும் பாபு ராஜு பாம்னே ஆகியோர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த கிரைம் தொடரில் பல குற்றவாளிகளின் தவறுகளை வெளிப்படுத்தி எப்படி பிடிப்பட்டனர் என்பதை கூறியதால், அதனைப் பயன்படுத்தி தப்பிக்க முயன்றுள்ளனர். சிசிடிவி கேமராவில் பிடிபடக்கூடாது என, ஷிண்டே, ஒரு இரு சக்கர வாகனத்தை திருடி, இரண்டு முறை உடையை மாற்றி பயணித்துள்ளார்.

பூனே- சோலாபூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவியில் அவர்கள் இருவரும் உடை மாற்றிய காட்சிகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.அது மட்டுமின்றி தலைக்கவசமும் அணிந்திருக்கிறார் அவர்.

ஆனால், செல்போனை வைத்து அவர்கள் தான் அங்கு இருந்தனர் என போலீசார் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.