வெள்ளத்தில் கொத்து கொத்தாக சடலமாக மிதக்கும் மிருகங்கள் : அதிர்ச்சியில் கேரள மக்கள்!!

878

கேரளாவில் மழை நீர் வடிய தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீரில் மிருகங்கள் சடலமாக மிதப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளத்தால் பல இடங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது மழை குறைந்துள்ளதால் பல இடங்களில் தண்ணீர் வடிய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அதிகளவு தண்ணீர் இருக்கும் போது மூழ்கி இறந்த நாய்கள், மாடுகள், பூனைகள், பன்றிகள் போன்ற மிருகங்களின் சடலங்கள் தற்போது வெளியில் வர தொடங்கியுள்ளது. 3000-க்கும் அதிகமான மிருகங்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மிருகங்களின் சடலங்கள் அழுகி வருவதால் இது மக்களுக்கு சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ஆலப்புழா, சாலக்குடி, குட்டனாட் போன்ற பகுதிகளில் அதிகளவில் மிருகங்கள் சடலமாக மிதப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.