வெள்ளிகொலுசில் அழுக்கு எடுத்து தர்றோம்… நூதன தி ரு ட்டில் வட இந்திய இளைஞர்கள்.. தனியாக இருக்கும் பெண்களே உஷார்…!

336

தி ரு டர்கள்……

இப்போதெல்லாம் தி ரு டர்கள் எந்த, எந்த வகையில் எல்லாம் தி ரு ட்டில் ஈடுபடுவார்கள் என்பது யூகிக்கவே முடியாத விசயம் ஆகிவிட்டது. அந்த வகையில் இப்போது கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து ஒரு கும்பல் கைவரிசை காட்டிவருகிறது. இதை வாலிபர் ஒருவர் கையும் களவுமாகப் பி டித்து இதுகுறித்து விளக்கம் சொல்ல குறித்த அந்தக் காணொளி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

பீகாரைச் சேர்ந்த வாலிபர்கள் இருவர் தமிழகத்தில் தனியாக வீட்டில் இருக்கும் பெ ண்களைக் கு றிவைத்து அவர்களின் வெள்ளி சாமான்களை அழுக்கு எடுத்து தருவதாகக் கேட்டு வாங்குகின்றனர்.

பெண்களும் 10, 20 ரூபாயிலேயே அழுக்கு எடுத்து தருவதாகச் சொல்லும் வார்த்தையை நம்பி தங்கள் வெள்ளிக் கொலுசு உட்பட வீட்டில் இருக்கும் பொருள்களை எடுத்துக் கொடுக்கிறார்கள். அவர்கள் இதற்கென கொண்டு வந்திருக்கும் பொடியை, ஒரு பாட்டிலில் இருக்கும் தண்ணீருக்குள் போட்டு வெள்ளிக் கொலுசை சுத்தம் செய்து கொடுக்கிறார்கள்.

இங்கே தான் தவறு நடக்கிறது. பாட்டிலில் இருக்கும் பாதரசம் வெள்ளியில் சில வற்றை அப்படியே உறிஞ்சி வைத்துக் கொள்ளுமாம். தொடர்ந்து வெள்ளியை பாதரசத்தில் இருந்து தனியே பிரிந்து எடுக்க முடியுமாம். 250 கிராம் கொலுசு கொடுத்த ஒரு பெண்ணுக்கு சுத்தம் செய்த பின்பு 148 கிராம் தான் கொலுசு இருந்திருக்கிறது.

உடனே அந்தப்பெண்ணின் கணவர் சுதாகரித்து இருவரையும் போலீஸில் ஒப்படைத்தார். பீகாரை சேர்ந்த அந்த வாலிபர்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதோ அந்தக் காணொளியைப் பாருங்கள்.