வெவ்வேறு துறைகளுக்கான நோபல் பரிசு: இன்று முதல் அறிவிப்பு!!

314

நோபல் பரிசு…….

உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றான நோபல் பரிசு இன்று முதல் வெவ்வேறு துறைகளுக்கு அறிவிக்கப்படுகிறது.

நோபல் பரிசு 1901ம் ஆண்டு 5 பிரிவுகளின் வழங்கப்பட்டது. இதனையடுத்து 1969ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

வெவ்வேறு துறைகளுக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர்கள் இன்று முதல் அறிவிக்கப்பட உள்ளனர். மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது. இயற்பியல் துறைக்கான விருது 6ம் தேதியும், வேதியலுக்கான விருது 7ம் தேதியும், இலக்கியத்திற்கான விருது 8ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன. 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் விருதும் அறவிக்கப்பட உள்ளன.