மும்பை…………

மும்பையில் கனமழை காரணமாக சாலையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்ததில் பெண்ணொருவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது காலநிலை மாற்றத்தினால் பல பகதிகளில் மழை பெய்து வருகின்றது. மேலும் அரபிக்கடலில் சில தினங்களாக ஆட்கொண்டு உள்ள டவ் தே என்ற புயலின் காரணமாக இந்தியாவிலுள்ள கடலோர மாநிலங்கள் பலவற்றிலும் கனமழை பெய்து வருகிறது.

டவ் தே புயலினால் மும்பையில் உள்ள கடலானது சீற்றத்துடன் காணப்படுவதுடன், பல இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருவதுடன், மின் இணைப்பும் இல்லாமல் இருந்து வருகின்றது.

மும்பையில் கனமழை பெய்த காரணத்தால் சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரம் வேரோடு பிடுங்கி சாய்ந்ததில், அங்கு நடந்து சென்ற பெண் ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
#Watch | As Mumbai faced the wrath of #CycloneTauktae, a video has now emerged that shows how a woman had a narrow escape when a free suddenly fell next to her. pic.twitter.com/hlKZ72inQh
— Hindustan Times (@htTweets) May 18, 2021
குறித்த பெண் மழையின் காரணத்தால் குடை பிடித்து நடந்து கொண்டிருந்தார். திடீரென அந்த பகுதியில் உள்ள பெரிய மரம் வேரோடு சாயும் பொழுது, அதனை கண்டு அச்சத்தில் ஓடியதில் நல்லவிதமாக உயிர் தப்பியுள்ளதைக் காணொளியில் காணலாம்.