வேறு நபரை திருமணம் செய்யபோகும் மனைவி: தடுத்து நிறுத்துமாறு கதறும் கணவன்!!

545

உகண்டாவில் பெண்ணொருவர் அடுத்தமாதம் நபரை திருமணம் செய்யவிருக்கும் நிலையில், அந்த பெண் தன்னுடைய மனைவி என இன்னொரு நபர் தெரிவித்துள்ளார்.

அகி அஷிம்வீ என்ற நபருக்கும் மெர்சி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஜூன் 22-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஜெரால்டு பம்விட்டிர்பய் என்ற நபர் தேவாலய அமைச்சர் மிபுயாவை நாடி திடுக்கிடும் புகாரை முன்வைத்துள்ளார்.அதன்படி திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மெர்சி தனது மனைவி எனவும் தங்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதமே திருமணம் நடைபெற்று விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி மெர்சியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கூறிய தேவாலய அமைச்சர் மிபுயா, முறைப்படி மெர்சியும், ஜெரால்டும் பிரியவில்லை.ஆனாலும் ஜெரால்டுடன் வாழபிடிக்காமலேயே அவரை விட்டு மெர்சி விலகியுள்ளார்.

விருப்பமில்லதவருடன் சேர்ந்து வாழ்ந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும்.இது குறித்து முறையான விசாரணை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.