சென்னை….

சென்னை, கொடுங்கையூர் எருக்கஞ்சேரி, கிருஷ்ணமூர்த்தி சாலையை சேர்ந்தவர் சுந்தர் (25). இவர், வடபெரும்பாக்கம் பகுதியில், வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவரின் மனைவி கோகிலா, இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சுந்தருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

இதனை, அவரின் மனைவி கோகிலா, தாய் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதனால் குடும்பத்தில் பயங்கர பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று , வீட்டில் இருந்தபோது, சுந்தர் மின் விசிறியில் தூக்கிட்டார்.

அவரை காப்பாற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.