வேலைக்கு சென்று ஒரு வருடமாகியும் வீடு திரும்பாத அம்மா : நடந்தது தெரியாமல் காத்திருக்கும் 2 வயது மகள்!!

582

காத்திருக்கும் 2 வயது மகள்

பிரித்தானியாவில் விபத்தில் கொ ல்லப்பட்ட அம்மாவிற்காக, 2 வயது மகள் ஓர் ஆண்டாக காத்திருக்கும் சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் Wakefield, Denby Dale சாலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 33 வயதான Kate Jaworski-Green, இரண்டு நாள் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் உ யிரிழந்தார்.

Kate கார் மீது மோதி விபத்தை ஏற்படத்திய 24 வயது Jordan Howlett-க்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சம்பவத்தன்று ம துபோதையில் இருந்த Howlett, த ற்கொ லை செய்துக்கொள்ளும் நோக்கத்தோடு விபத்தை ஏற்படுத்தியதாக நீதி மன்ற விசாரணையில் தெரியவந்தது.

வேலைக்கு சென்ற அம்மா இறந்தது அறியாத Kate-ன் 2 வயது மகள் Lydia , அம்மா எங்கே, எப்போ வருவார்கள் என தன்னிடம் தினமும் கேட்பதாக Kate-ன் கணவர் Paul Jaworski நீதிமன்றத்தில் கூறினார்.

Lydia தாயை இழந்தது மிகவும் துயரமானது, அம்மா எப்படி தன்னை தனியாக விட்டுச் சென்றுவிட்டார் என அவர் தினமும் சிந்தித்துக்கொண்டிருப்பதை நாங்கள் உணருகிறோம்.

அம்மா கண்டிப்பாக ஒருநாள் வீடு திரும்புவார் என Lydia நம்பிக்கொண்டிருப்பதாக Paul நீதிமன்றத்தில் கூறியது அனைவரையும் கலங்க வைத்தது.