வைரமுத்து குறித்து மனம் திறந்த நடிகை குஷ்பு!!

971

நடிகை குஷ்பு

40 வருடங்கள் நான் சினிமா துறையில் இருக்கிறேன், ஆனால் இதுவரை பாலியல் தொந்தரவுகளை சந்தித்தது கிடையாது என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

மேலும், மீடூ என்பதை நான் வரவேற்கிறேன், ஆனால் பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளை அவ்வப்போது எதிர்கொண்டு, அதனை வெளியில் கொண்டுவரவேண்டும்.

சின்மயி விவகாரத்திலும் தற்போது அதுதான் நடந்துள்ளது. ஆனால் வைரமுத்து அவர்களுக்கும் இதுகுறித்து பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

எனது வாழ்நாளில் நான் பார்த்த கண்ணியமான மனிதர் வைரமுத்து. எனது கணவர் மற்றும் என்னுடன் நன்றாக பேசுவார். மிகவும் உணர்ச்சிகரமான மனிதர்.

தமிழின் அடையாளமாக அவரை நான் பார்க்கிறேன் என கூறியுள்ளார். வைரமுத்து அவர்கள் அரசியல் பின்னணி கொண்டவர், மிகப்பெரிய மனிதராக இருந்த காரணத்தால் அவர் மீது அப்போது புகார் கொடுக்கவில்லை என்று கூறுவது தவறானது.

ஏனெனில், அவர் திமுக கட்சியில் எந்த பதிவியிலும் இல்லை. இப்படி ஒரு குற்றச்சாட்டானது மறைந்துபோன கருணாநிதி ஐயா அவர்களையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், தொலைக்காட்சியில் தனது தயாரிப்பில் ஒளிபரப்பாகிவரும் நந்தினி சீரியலில் நடித்துவந்த ராணி என்பவர், அவருடன் நடித்த சகநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

ஆனால், அந்த புகாரை வாபஸ் வாங்க கூறியுள்ளதற்கு காரணம், இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் விஷால் ஆகிய இருவரிடம் கலந்துரையாடியுள்ளேன்.

படப்பிடிப்பு தளத்தில் இவர்களுக்குள் அடித்துக்கொண்டதாக மட்டுமே எனது காதுக்கு தகவல் வந்தது. ஆனால், பாலியல் தொல்லை குறித்து வரவில்லை, இதனால் இதுகுறித்து தொடர்ந்து விசாரிக்கப்படும் என கூறியுள்ளார்.