ஷாரிக்-ஐஸ்வர்யா இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்களா?- ரசிகர்கள் நினைத்ததை தாண்டி ரம்யா வெளியிட்ட தகவல்

588

பிக்பாஸ் முதல் சீசனில் அழகான காதல் ஜோடி இருந்தார்கள் ஓவியா-ஆரவ். நிகழ்ச்சியில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்கள் என்பது வேறு கதை.இந்த இரண்டாவது சீசனில் ஷாரிக்-ஐஸ்வர்யாவின் காதல் உருவாகும் என்று பார்த்தால் அப்படியே முடிந்துவிட்டது.

ஆனாலும் மக்களுக்கு இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியே வந்த ரம்யாவிடம் ஒரு பேட்டியில் ஷாரிக்-ஐஸ்வர்யா காதல் குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் முதலில் அவர்களுக்குள் ஏதோ ஏற்பட்டது உண்மை தான், பிறகு சில பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு கடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.