ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ரசிகர்கள் செய்துள்ள மோசமான செயல் : குடும்பத்தினர் அதிர்ச்சி!!

645

ஜான்வி கபூர்

சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் ஜான்வியின் அப்பா போனி கபூரின் முதல் மனைவி மகன் அர்ஜுன் கபூரும் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதில் ஜான்வி தன் உறவினர் யாருக்காவது கால் செய்து “Hey Karan, what’s up” என அவர்களை சொல்ல வைத்துவிட்டால் வெற்றி பெறுவார்.

ஜான்வி உடனே தன் சகோதரி அன்ஷுலாவுக்கு (போனி கபூரின் முதல் மனைவி மகள்) கால் செய்தார். ஆனால் அப்போது அர்ஜுன் கபூர் பேச்சை கேட்டு அன்ஷுலா ஜான்விக்கு உதவவில்லை. இதனால் தோற்ற ஜான்வி தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை என விரக்தியுடன் பேசினார்.

இதனால் கோபமான ஜான்வியின் ரசிகர்கள் அன்ஷுலாவை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். அதிலும் சிலர் எல்லை மீறி போய் ரேப் மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு ஜான்வி அதிர்ச்சிதெரிவித்துள்ளார்.

மேலும் அர்ஜுன் கபூரும் ட்விட்டரில் இது பற்றி கோபமாக கெட்ட வார்த்தைகளில் திட்டி பேசியுள்ளார்.