இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை தானமாக வழங்கியுள்ளதை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை புலவர் நடராஜன் என்பவரின் மனைவி இறந்ததால் தற்போது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தமக்கு சொந்தமான 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை மகளிர் நூலகத்துக்கு தானமாக வழங்கியுள்ளார்.
நடராஜனின் விருப்பப்படி அவரது இல்லம், மகளிர் நூலகமாக மாற்றப்பட்டது. இந்த நூலகத்தை அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் திறந்து வைத்தனர்.
1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, மகளிர் நூலகத்துக்கு வழங்கிய நடராஜனை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
