10 வயது சிறுமியுடன் திருமணம்! சித்திரவதை செய்து கொன்ற இளைஞன்: அதிர்ச்சி காரணம்

1008

சுமார் பத்து வயதுள்ள ஒரு சிறுமியை மணந்து கொண்ட ஒரு நபர் பழிவாங்குவதற்காக அவளைச் சித்திரவதை செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானைச் சேர்ந்த Hameya என்னும் சிறுமி தன் குடும்பத்திற்கு பெண் கொடுத்த குடும்பத்திற்கு மணமகளாகச் சென்றாள்.ஆப்கானில் வரதட்சணையை தவிர்ப்பதற்காக ஏழைக் குடும்பங்களில் இதுபோன்ற திருமணங்கள் நடைபெறுவது சகஜம்.

அந்த மணமகனுக்கு சுமார் 30 வயது இருக்கும், இந்நிலையில் Hameya வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை அவள் கணவன் கொலை செய்து விட்டான்.இதற்கு பழி வாங்கும் விதத்தில் Hameyaவின் கணவன் அவளை சித்திரவதை செய்ய தொடங்கியிருக்கிறான்.

ஒரு கட்டத்தில் அவளைக் கொன்று விட்டு அவன் தப்பி ஓடி விட்டான். அவனைப் பொலிசார் தேடி வருவதோடு குழந்தைத் திருமணம் செய்வித்ததற்காக Hameyaவின் தந்தையை கைது செய்துள்ளனர்.ஏனென்றால் ஆப்கானிஸ்தானில் சட்டப்படி திருமண வயது ஆணுக்கு 18ம் பெண்ணுக்கு 16ம் ஆகும்.