100 கோடி வசூலித்த ஸ்ரீதேவி மகளின் முதல் படம்!

581

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான ‘தடக்’ ஹிந்தி திரைப்படம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமான ஹிந்தி திரைப்படம் ‘தடக்’. மராத்தியில் பெரும் வெற்றி பெற்ற சாய்ராட் படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் உருவாகியிருந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படம் நூறு கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, படத்தின் தயாரிப்பாளர் கரண் ஜோகர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில்,

’தடக் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. அறிமுக நடிகர்களின் படம் வசூல் சாதனை படைப்பது அரிது. ஜான்வி, இஷான் உங்களை நினைக்கும்போது பெருமையாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.