100 வயதை பூர்த்தி செய்த ரயில்வே முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரயில்வே நிர்வாகம்…!

417

மராட்டிய மாநிலத்தின்…………

மராட்டிய மாநிலத்தின் புசாவல் பகுதியை சேர்ந்தவர் கேசவ் நார்கர் பாபத். மத்திய ரயில்வே இந்திய பென்னின்சுலா ரயில்வேயாக இருந்த போது கடந்த 1951ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.ரயில்வே கார்டாக வேலை ஆரம்பித்த அவர் கடந்த 1978ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

நிலையில் கடந்த 21ம் திகதி அவருக்கு 100வயதை பூர்த்தி செய்தார்.வயதில் சத்தம் அடித்த மூத்த ஊழியரை ரயில்வே நிர்வாகம் கௌரவிக்க விரும்பியது.அதனை தொடர்ந்து அவரின் ஓய்வு ஊதியத்தை இரட்டிப்பாகி வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

அத்துடன் அவரது 100-வது பிறந்தநாளையொட்டி புசாவல் கோட்ட மேலாளர் விகாஸ் குமார் மற்றும் அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று அவருக்கு பூங்கொத்து, இனிப்பு மற்றும் வாழ்த்து கடிதங்களை கொடுத்து ஆச்சரியப்படுத்தினர்.

100 வயதான கேசவ் நார்கர் பாபத் முதலில் ராணுவத்தில் பணியாற்றியதாகவும் அதில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று ரயில்வேயில் பணிக்கு சேர்ந்து உள்ளார். அவர் 2ம் உலகப்போரில் பங்கு பெற்று இருந்ததாகவும் போருக்காக பல நாடுகளுக்கு பயணம் செய்ததாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.