10000 நாய்களை பலியிடும் சீனர்கள்: உலகை உறைய வைக்கும் வினோத திருவிழா!!

845

சீனாவில் உலகையே உறைய வைக்கும் வகையில், 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாடக் கூடிய சீனர்களின் திருவிழா தொடங்க உள்ளது.சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலினிக் நகரில், ஆண்டு தோறும் லிச்சி நாய் இறைச்சி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வாரம் நடைபெறும் இந்த திருவிழாவில் ஏராளமான நாய்கள் பலியிடப்படும்.

இதனை சீனர்கள் தங்களது பாரம்பரிய வழக்கம் என்று அழைக்கிறார்கள். கோடைகாலங்களில் நாய் இறைச்சியை பெருமளவு உண்பது உடலுக்கு நல்லது என்பது அவர்களின் நம்பிக்கை.யூலின் திருவிழாவைப் பொறுத்தவரை, உயிருடன் விற்பனை செய்யப்படும் நாய்கள், அங்கேயே வெட்டப்பட்டோ அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டோ இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த திருவிழா வரும் 21ஆம் திகதி தொடங்க உள்ளது. ஆனால், இத்திருவிழாவில் விற்பனை செய்வதற்காகவே ‘நாய் வேட்டை’, ‘நாய் திருட்டு’ அமோகமாக நடைபெற்று வருவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

மேலும், அந்த நாய்கள் மிகக் கொடூரமான முறையில் கூண்டுகளில் அடைத்து யூலினுக்கு நாய்கள் கொண்டு வரப்படுவதால், இந்த திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியும் வருகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.