மற்ற ஆண்களுடன் இணைத்து சந்தேப்படுவார் : கணவராக பார்க்கவில்லை : பாலாஜி குறித்து நித்யா!!

1219

சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் பாலாஜி மீதான் உறவு குறித்து நித்யா பதில் அளித்துள்ளார். பாலாஜி மிஸ் பண்ணுறீங்களா என்ற கேள்விக்கு நந்தினியின் பதில்

நான் அப்படி நினைக்கவில்லை. நான் மிஸ் பண்ணதைவிட, அவர் உணர்ந்து கொள்வதற்கான காலகட்டமாகத்தான் இதைப் பார்க்கிறேன். ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து அவர் வந்தபிறகும், மறுபடியும் அவருக்கு ‘பிக் பாஸ்’தான். எந்தக் கடை முன்பும் நிற்காமல், நிறைய விஷயங்களைச் செய்யாமல், என்னையும் மற்ற ஆண்களுடன் இணைத்து சந்தேகப்படாமல் இருந்தால், நானும் போஷிகாவும் அவருடன் இணைந்து வாழத் தயார். மாறுவது அவர் கையில்தான் இருக்கிறது.

ஒரு இடைவெளிக்குப் பின் ‘பிக் பாஸ்’ வீட்டில் பாலாஜியுடன் இருந்தீர்கள். அப்போது உங்களின் மனநிலை எப்படி இருந்தது?

கணவராக இல்லாமல், சக போட்டியாளராக மட்டுமே பாலாஜியைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துதான் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளேயே போனேன். முதல் நாள் எப்படிப் போனேனோ, 28 நாட்களுக்குப் பிறகு வெளியே வரும்போதும் அதே மனநிலையில் தான் இருந்தேன்.

‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் இருக்கும்போது எல்லாரையும் போல அவரையும் நண்பராகத்தான் நினைத்துப் பழகினேன். ‘பிக் பாஸ்’ முடிந்து வெளியில் வந்தபிறகு கணவராக நடந்துகொள்வதும் இல்லை, நண்பராகத் தொடர்வதும் பாலாஜி கையில்தான் இருக்கிறது.

இருந்தாலும் பாலாஜி உங்களுக்கு ஊட்டிவிடுவது போன்ற நெருக்கமான சூழலில் உங்களுக்குள் இருந்த அன்பு வெளிப்படவில்லையா?

28-வது நாள் ‘ஐ லவ் யூ நித்யா’ என்று பாலாஜி சொன்னார், நானும் ‘சேம் ஹியர்’ என்று சொன்னேன். இதையே அவர் முதல்நாள் சொல்லியிருந்தாலும், அப்போதும் என் பதில் இதுவாகத்தான் இருந்திருக்கும். பாலாஜியை எனக்கு ரொம்பப் பிடிக்கும், இன்னமும் பிடிக்கும். ஆனால், கணவராக இருப்பதற்கான விஷயங்களை அவர் இன்னும் எனக்குத் தரவில்லை. கணவராக அவர்மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை.

நான் மன்னிக்கத் தயாராக இருக்கிறேன், என்னை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். நான் நம்புவதற்கான விஷயங்களை அவர் செய்தார் என்றால், அவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

நித்யாவுக்கு ‘பிடிவாதக்காரி’ என்றொரு பெயரும் இருக்கிறது. போஷிகாவுக்காக இந்த விஷயத்தில் விட்டுக்கொடுத்துப் போகலாமே…

ஆமாம், பிடிவாதம் தான். ஆனால், சரியான விஷயங்களுக்கு மட்டுமே நான் பிடிவாதம் பிடிப்பேன். பாலாஜியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கூடாது என்று என்னுடைய அப்பா, அம்மா தடுத்தனர். அப்போது நான் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால், இந்தக் கல்யாணமே நடந்திருக்காது.

எனக்கு சில விஷயங்கள் வேண்டும் என்றால், மற்றவர்களைக் காயப்படுத்தாதவரை அதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை மற்றவர்களைக் காயப்படுத்தினால், அந்த சமயங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறேன்.