2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் தற்கால மிதிவண்டியின் ஓவியம் : வியக்க வைக்கும் தகவல்!!

575

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான பஞ்சவர்ணஸ்வாமி ஆலயத்தில் தற்கால மிதிவண்டியின் ஓவியம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சோழர்கால ஆட்சியில் கட்டப்பட்டதாகும் இந்த பஞ்சவர்ணஸ்வாமி ஆலயம்.

இந்த ஆலயத்தின் சுவர் ஒன்றில் நபர் ஒருவர் மிதிவண்டி மிதித்து செல்வது போன்று செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஓவியத்தை முதன் முறையாக கண்டறிந்த நபர் ஒருவர் இது தொடர்பாக தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி தற்கால மிதிவண்டி வடிவமைக்கப்பட்டது 1800 ஆம் ஆண்டுகளில், அதாவது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர்.

ஆனால் இந்த கோவிலானது 2000 ஆண்டுகள் பழமையானதாகும். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் வரலாற்று ஆய்வாளர் ஒருவரும் பஞ்சவர்ண்ஸ்வாமி கோவிலில் உள்ள மிதிவண்டி ஓவியம் குறித்து பதிவு செய்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் இந்த மிதிவண்டி தொடர்பில் அவர் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆனால் அவருக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்னொரு தகவலும் குறித்த மிதிவண்டி தொடர்பில் வெளியாகியுள்ளது. கடைசியாக 1920 ஆம் ஆண்டு குறித்த கோவிலானது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அக்காலகட்டத்தில் பொதுமக்களின் ஒரே வாகனம் இந்த மிதிவண்டி மட்டுமே. இதனால் கோவிலில் குறித்த மிதிவண்டியை வரலாற்று சின்னமாக ஏதேனும் ஒரு சிற்பி ஓவியமாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.