80 வயதில் 20 வயது உடலமைப்பு : இளைஞர்களுக்கு சவால் விடும் முதியவர்!!

724

ஜப்பானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 80 வயதில் தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் டோஷிசுகே கனஸாவா(81). தனது 34 வயது வரை ‘Body Builder’ ஆக இருந்த இவர், அதன் பிறகு ஓய்வு எடுத்துக்கொண்டார்.

பல சாம்பியன் பட்டங்களையும், பதக்கங்களையும் வென்றிருந்த கனஸாவா, பின்னர் மருந்து அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் விரும்பிய உணவுகளை உண்ணுதல் என அவர் உடல்நிலையை கெடுத்துக் கொண்டார்.

அதன் பின்னர், தனது 50வது வயதில் தன்னுடைய தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மீண்டும் ‘Body Builder’ ஆக வேண்டும் என்று நினைத்தார்.

அதற்காக தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். மது, புகைப்பிடித்தலை முற்றிலும் கைவிட்டார் கனஸாவா. பின்னர், இளைஞராக இருந்தபோது தினமும் 6 மணிநேரம் செய்த உடற்பயிற்சியை, 3 மணிநேரமாக குறைத்து மேற்கொள்ள ஆரம்பித்தார்.

அவரது உடலில் மாற்றம் வர ஆரம்பித்தது. நோய்களும் காணாமல் போயின. அதன் விளைவாக கடந்த 2016ஆம் ஆண்டு தனது 80வது வயதில் உலக ‘Body Builder’ போட்டியில் கலந்து கொண்டு 6ஆம் இடம் பிடித்தார். மேலும், வயதான போட்டியாளர் என்ற தங்கப்பதக்கத்தையும் பெற்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘85 வயது வரை என் உடல் ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். அதுவரை Body Builder ஆக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.