ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை தான் : பகீர் கிளப்பிய பழம்பெரும் தமிழ் நடிகை!!

1011

1983லிருந்தே சினிமாத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது என ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி கருத்து தெரிவித்துள்ளார்.சமீப நாட்களாகவே சினிமா துறையில் நடைபெற்று வரும் பாலியல் தொல்லைகள் குறித்து ஒவ்வொரு நடிகையாக வாய்ந்த திறந்து வருகின்றனர்.

அதிலும், தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஒரு படி மேல் சென்று, தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிய ஒவ்வொரு நடிகரின் பெயரையும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மிகவும் துணிச்சலாக வெளியிட்டு வருகிறார்.இதற்கு சினிமா நடிகைகள் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, சினிமா துறையில் நடிகைகளுக்கு நல்ல மரியாதையை இருப்பதாக கூறி வருகின்றனர்.

மற்றொரு புற நடிகைகள் சிலர் பட்டும்படாமலும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், சிறுவயதிலிருந்தே பல்வேறு வேடங்கள் ஏற்று நடித்து, தமிழக மக்களுக்கு மிகவும் பரிட்சயமான முகமான பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி இதுகுறித்து வாய் திறந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், சினிமா துறையில் பாலியல் தொல்லை என்பது இப்போது மட்டுமல்ல. எண்பதுகளில் இருந்தே இருந்து வருகிறது என பகீர் கிளப்பியுள்ளார்.

ஸ்ரீரெட்டியை நினைக்கும்போது பரிதாபமாக இருக்கிறது. அனைவரும் அவரை பயன்படுத்திவிட்டு அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றியிருக்கின்றனர் என தெரிவித்த அவர், தன்னுடைய திறமையை மதித்து வாய்ப்பு கொடுங்கள், இல்லையென்றால் எனக்கு வாய்ப்பு வேண்டாம் என ஸ்ரீரெட்டி உறுதியாக இருந்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காது என கூறியுள்ளார்.

மேலும் நிச்சயமாக தனது மகள்களை சினிமாவிற்கு நடிக்க அனுப்ப மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.