இன்றைய ராசிபலன் (16-07-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

1368

இன்றைய ராசிபலன்…

மேஷம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடிவந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படத் தொடங்குவார்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களைக் கலந்து ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்ததைச் சாதிக்கும் நாள்.

மிதுனம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

கடகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும்.செலவினங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

சிம்மம்

உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள்.மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்தகாரியங்கள் நிறைவேறும் நாள்.

துலாம்

குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.வெளிவட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகார பதிவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவு கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர் நண்பர்களால் ஆவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கும்பம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

மீனம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராட வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.